தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (நவம்பர் 18) காலை 10 மணிக்கு கூடியது. இந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்… ஏற்கனவே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.
இதன் பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, “மாண்புமிகு ஆளுநர் கடந்த 13 ஆம் தேதி திருப்பி அனுப்பிய பத்து சட்ட முன் வடிவுகளையும் தனித் தீர்மானமாக கொண்டுவந்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் முதலமைச்சர்.
இந்தத் தீர்மானத்தின் மீது பேச முன் வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு , இறையாண்மையை பாதுகாத்திட இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, அல்லது இந்திய நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் பற்றியோ அல்லது மாண்புமிகு ஆளுநர்கள் பற்றியோ எந்த கருத்துகளை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆகவே முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அடிப்படையாக வைத்து உங்கள் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.
முதலில் அழைக்கப்பட்ட ஜெகன் மூர்த்தி பேச விருப்பமில்லை என்று பதிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசினார். அவரையடுத்து கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Bigg boss 7 Day 47: வீட்டின் முடிவை எதிர்த்து போராடும் விசித்ரா – அர்ச்சனா!