speaking for india mk stalin

முதல்வர் ஸ்டாலின் ஆடியோ பிரச்சாரம்!

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக ஆட்சிக்கு எதிராக ஆடியோ பரப்புரை செய்ய உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் இன்றும் நாளையும் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்ல உள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆடியோ பிரச்சாரம் செய்ய உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,

”வணக்கம்… கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். திமுக 75வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி.

அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் நாங்கள்.

இப்போது இந்தியாவிற்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடிய போகும் பாஜக ஆட்சி இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஆடியோ சீரிஸில் பேசப் போகிறேன்.

அதற்கு ‘speaking for india’ என்ற தலைப்பு வைத்துக் கொள்ளலாமா? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

மீண்டும் போர் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது குண்டு வீச்சு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *