sp velumani says aiadmk

என்றென்றும் அதிமுககாரன்: எஸ்.பி.வேலுமணி

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் என்றென்றும் அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக்குடன் மிதிவண்டி பேரணி நடத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்கள் குறித்து விமர்சித்து வந்ததால் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. செப்டம்பர் 25-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தசூழலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டில் மூத்த நிர்வாகிகள் சிலருக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவும் எஸ்.பி.வேலுமணியை ஏக்நாத் ஷிண்டேவாக பாஜக பயன்படுத்தக்கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்தது.

இதுகுறித்து செப்டம்பர் 19-ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “நான், தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்களுக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். டெல்லியெல்லாம் எங்களுக்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி மீண்டும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்ட பதிவில் “என்றென்றும் அதிமுககாரன்” என்ற ஹேஷ்டாக்குடன் அதிமுக கொடியுடன் மிதிவண்டி பேரணி நடத்திய படத்தை பதிவிட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணியின் “என்றென்றும் அதிமுககாரன்” என்ற ஹேஷ்டாக்கை அதிமுகவினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட “சூப்பர் ஸ்டார்”

’சந்திரமுகி 2’: படக்குழுவிற்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *