அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, காவிரியிலிருந்து காளிங்கராயர் அணைக்கு தண்ணீர் வந்த மறுநாளே இத்திட்டம் துவக்கி வைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்றாவது நாள் இன்று (அக்டோபர் 11) காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, “கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயனடைகின்ற வகையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கப்பட்டு 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்தது. இத்திட்டத்தை விரைவாக துவக்கி வைக்க வேண்டும். காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம் ஆகிய குளங்களுக்கு நீர் நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், “அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது தான். அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. ஆனால் திட்டத்திற்கான பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை துவக்க காளிங்கராயன் அணையிலிருந்து 1.5 டிஎம்சி நீர் எடுக்க வேண்டும். காவிரியிலிருந்து தண்ணீர் வந்த மறுநாள் காளிங்கராயர் அணையிலிருந்து தண்ணீர் எடுத்து திட்டத்தை துவக்கி வைத்துவிடலாம். இந்த திட்டத்தை முடித்தவுடன் குளங்களுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஒரே நதிநீர் இணைப்பைக் கொண்டு வராதது ஏன்? – கி.வீரமணி