தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காஞ்சிபுரம் தவிர்த்து பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 22) காலை வெளியானது.

அதன்படி திண்டுக்கல் – ம.திலகபாமா, அரக்கோணம் – கே.பாலு, ஆரணி –  அ.கணேஷ் குமார், கடலூர் – இயக்குநர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி – அரசாங்கம், சேலம் – ந. அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பசுமை தாயகத்தின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான செளமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: அதிக வெற்றியை பெற்ற கேப்டன் யார்…?

அமலாக்கத்துறை கைது: கெஜ்ரிவால் ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel