சௌமியன் வைத்தியநாதன், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திவ்யா சத்யராஜுக்கு திமுகவில் தலைமை கழக பதவி!

Published On:

| By Selvam

திமுக இலக்கிய அணி துணைச் செயலாளராக சௌமியன் வைத்தியநாதன், திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக திவ்யா சத்யராஜ் ஆகியோரை தலைமை கழக நிர்வாகிகளாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். Soumya Vaidyanathan Divya Sathyaraj

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்.மைதீன்கான், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜோசப்ராஜ், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராகவும், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வேப்பூர் வி.எஸ்.பெரியசாமி மறைவெய்திய காரணத்தால், குன்னம் ராஜேந்திரன் மற்றும் கே.வி.எஸ்.சீனிவாசன் திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோவை செல்வராஜ் மறைவெய்திய காரணத்தால், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட தமிழ்பொன்னிக்குப் பதிலாக, திவ்யா சத்யராஜ் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராகவும், பி.எம்.ஸ்ரீதர் மற்றும் பா.ச.பிரபு ஆகியோர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர்.சுந்தரம் மறைவெய்திய காரணத்தால், வே.தமிழ்பிரியா, திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் சுந்தரம் மறைவெய்திய காரணத்தால், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் மருதூர் ஏ.இராமலிங்கம் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராகவும், கொ.ரமேஷ் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரன் மறைவெய்திய காரணத்தால், சௌமியன் வைத்தியநாதன், ஜி.நாகநாதன் மற்றும் வி.டி. கலைச்செல்வன், ஆகியோர் திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளராக எம்.எஸ்.ஹரிபாபு, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட திண்டுக்கல் க.பொன்ராஜ் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், அவருக்குப் பதிலாக ஜெ.இராமகிருஷ்ணன் திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகவும்,

திமுக தொண்டர் அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட திருச்சி முத்துக்குமரன் சரிவர கட்சி பணியாற்றாத காரணத்தால் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, எஸ்.எம்.கே.அண்ணாதுரை, திமுக தொண்டர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். Soumya Vaidyanathan Divya Sathyaraj

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share