காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் : விலகிநின்ற சோனியா, ராகுல்

அரசியல்

சத்தீஸ்கரில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மூவரும் கலந்துகொள்ளாதது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் செயற்குழுவின் 85-வது வழிகாட்டுக் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றுவருகிறது.

இதில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்ப்பது, ஆளும் பா.ஜ.க.வை எதிர்கொள்வது உள்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர், டெல்லிக்கு வெளியே நடக்கும் முதல் வழிகாட்டுக்குழுக் கூட்டம், இது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

மேலும், காங்கிரஸ் செயற்குழு நிர்வாகிகள் தேர்வில் காந்தி குடும்பத்தினர் தலையீடு இருக்கக்கூடாது என்பதாலும்,

புதிதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டியும், காந்தி குடும்பத்தினர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டுக் குழு கூட்டம் நிறைவடைந்ததும், பிற்பகலில் நடைபெறும் பிற அமர்வுகளில் மூவரும் பங்கெடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து 15,000 காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தீஸ்கர் வந்துள்ளனர்.

வரும் 26ஆம் தேதி மதியம் வரை நடக்கும் இந்தக் கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இறுதி உரையுடன் நிறைவடைய உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

சிவகார்த்திகேயனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *