ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்,
முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவார் என்று முதலில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் தமிழகம் வர முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
பிரியா
யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 : வசூல் எப்படி?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி