sonia gandhi letter to pm

சிறப்புக் கூட்டத்தொடர்: மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

அரசியல் இந்தியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனி நபர் தீர்மானங்கள் மீதான விவாதம் எதுவும் நடைபெறாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரமே இல்லை என்றால் எதற்காக இந்த கூட்டத்தொடர் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படாமல் கூட்டப்பட்டுள்ளது. இது எதற்காக கூட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த கூட்டத்தொடரில் பின்வரும் பிரச்சனைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு மற்றும் MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.

2. விவசாயிகள் மற்றும் உழவர் அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அவர்களால் எழுப்பப்பட்ட இதர கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அளித்த உறுதிமொழியை செயல்படுத்துதல்.

3. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகளில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக வெளிவந்திருக்கும் உண்மைகளை விசாரிக்க கூட்டுப் பாராளுமன்ற குழு ( JPC) அமைக்கும் கோரிக்கை.

4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் அம்மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கம் முற்றாக சிதைந்து போயிருத்தல்

5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படும் வகுப்புவாத பதற்றம்

6. இந்தியப் பகுதிகளில் சீனாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு. அதனால் லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது எல்லைகளில் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்

7. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசரத் தேவை.

8. மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.

9. சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம்” ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன செய்தது?: சீமான்

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *