கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை (அக்டோபர் 14) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 6.45 மணிக்கு டெல்லியில் உள்ள வீட்டிலிருந்து புறப்படும் சோனியா மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் இரவு 7.45 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகின்றனர்.
இரவு 7.55 மணிக்கு விஸ்தாரா விமானம் மூலம் சென்னை புறப்படுகின்றனர்.
இரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சோனியா காந்தி, பிரியங்கா இருவரும் இன்று இரவு தங்குகிறார்கள்.
நாளை காலை காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா காந்தி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் மாலை 4.35 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்படும் சோனியா, பிரியங்கா இருவரும் மாநாடு நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தடைகின்றனர்.
மாலை 7 மணி வரை மாநாட்டு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு பின்னர் ஓட்டலுக்கு திரும்புகின்றனர்.
இரவு ஓட்டலில் தங்கும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் காலை 6 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார்கள். 6.55 மணிக்கு விஸ்தாரா விமானம் மூலம் டெல்லி திரும்புகின்றனர்.
இந்தநிலையில் மாநாடு நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கொசு தொல்லை: புகாரளிக்க உதவி எண்கள்!
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் மோசடி நடந்தது எப்படி?
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!