எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

Published On:

| By Selvam

sonia gandhi opposition parties dinner

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த டின்னர் விருந்தில் சோனியா, மம்தா, ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு வியூகம் வகுப்பதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் இன்றும் நாளையும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,  கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஃபரூக் அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட 26 கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையுடன் இன்று கூட்டம் துவங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த டின்னர் விருந்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.

செல்வம்

விஷாலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

“பொன்முடி வீட்டின் லாக்கரை திறக்க முடியவில்லை” – சாவி தயாரிப்பாளர்