கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு சோனியா காந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக தொற்றில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை இன்று ( ஆகஸ்ட் 23 ) சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது குடியரசுத்தலைவராக ஜூலை மாதம் 25-ம் தேதி பதவியேற்றார்.
திரவுபதி முர்முவை மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார்
இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசுத்தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மணீஷ் சிசோடியாவுக்கு அடுத்த நெருக்கடி:அசாம் நீதிமன்றம் சம்மன்!