முதல்வரிடம் நலம் விசாரித்த சோனியா காந்தி

அரசியல்

கொரோனா பாதிப்பு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்குக் கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 14ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகக் காவேரி மருத்துவமனை தெரிவித்தது. அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் முதல் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். விரைந்து நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முன்னதாக சோனியா காந்தி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *