ராகுலுடன் வெளிநாடு செல்லும் சோனியா காந்தி: ஏன்?

அரசியல்


காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சோனியா காந்திக்குக் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

முதல் தொற்று பாதிப்பின் போது அவருக்குச் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டது. அதோடு மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டது. இதனால் அவர் பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

sonia gandhi going aboard

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள அவர், நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் சோனியா காந்தி மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக நேற்று இரவு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஜெயராம் ரமேஷ் எம்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார்.

பின்னர் டெல்லி திரும்புவதற்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயையும் அவர் சந்திக்க உள்ளார்.

சோனியா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் பயணிக்க உள்ளனர்.

வரும் செப்டம்பர் 4ம் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸின் மேகங்காய் பல் ஹல்லா போல் பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஆகஸ்ட் 30: அமைச்சரவை கூட்டத்தில் மூன்று அஜெண்டா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2