மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று ( பிப்ரவரி 14) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
56 ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிவார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்ற சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராஜ்யசபா எம்.பி தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவது குறித்து அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜஸ்தான் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். ராஜஸ்தான் மாநிலத்துடனான சோனியா காந்தியின் நெருக்கம் என்பது மிகவும் பழமையானது” என்று தெரிவித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றார். இந்தநிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை தேர்தல் மூலம் ராஜ்யசபா எம்.பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது : ED எதிர்ப்பு!
ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றம்!