மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு வருகை தர நாடு முழுவதும் உள்ள பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று இரவு சென்னை வந்தனர்.
அவர்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்
திருமதி @priyankagandhi ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. pic.twitter.com/rHhPn2VKS9
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 13, 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்….
மோனிஷா