காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்திக்குக் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. முதலில் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் பின்னர் கங்காராம் மருத்துவமனையில் ஜூன் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பை தொடர்ந்து மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டதாலும் சுவாசப் பாதையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டதாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஏறத்தாழ 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனத் தொடர் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அதுபோன்று 2024 தேர்தல், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ராகுல் காந்தியின் யாத்திரை என அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகள் படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிரியா
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!