காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான சோனியா காந்தி கடந்த ஆண்டு 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறினார்.
அதைத் தொடர்ந்து அவ்வப்போது உடல் ரீதியாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது காய்ச்சலால் அவதிப்பட்ட சோனியாகாந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாட்டில் சோனியாகாந்தி கலந்துகொண்டார்.
2ஆவது நாள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசிய போது, “காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை யாத்திரை) அமைந்தது.
வெறுப்புவாதத்திற்கு எதிராக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் (அரசியல் பயணம்) நிறைவு பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பாஜகவை முழுபலத்துடன் காங்கிரஸ் தோற்கடிக்கும்” என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் நடந்த கலாட்டா!
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா?: தமிழ்நாடு போலீஸ் கடும் எச்சரிக்கை!