“தமிழகத்தின் வளர்ச்சிக்கு 1.48 லட்சம் கோடி”: சென்னை பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி

Published On:

| By Selvam

வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று (ஏப்ரல் 6) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சிகளால் கூற முடியுமா? தேசத்தின் நலன் தான் எங்களது நோக்கம். இந்தியா கூட்டணியின் அஜெண்டா என்ன?

அவர்களுக்கு தலைவர்களும் கிடையாது, நோக்கமும் கிடையாது. நாட்டை சூறையாடுவது மட்டும் தான் அவர்களது நோக்கம். ஆன்மிக பூமியான தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை எரித்த திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று சொல்ல முடியும்.

கேரளாவில் பிஎப்ஐ போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி எப்படி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்?

2014- 2024 வரை மத்திய அரசு ரூ.1.48 லட்சம் கோடி தமிழகத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் என்று அவர்களால் கூற முடியுமா?

அதனால் தான், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவும், குடும்ப ஆட்சியை ஒழிக்கவும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

தஞ்சை பெரியகோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பெருவிழா!

திமுக விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி கவலைக்கிடம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel