அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (ஆகஸ்ட் 20) அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் திட்டத்தை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் போது ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவைத் தமிழக அரசு அமைத்து 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் டேவிதார் தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரியா
ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: ஒருநபர் ஆணையம் அமைப்பு!