தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை (ஜூலை 15) ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட ஆய்வுக் கூட்டத்தில் நடந்த சுவையான சம்பவம் என்ற பெயரில் காமராஜர் குறித்த பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஜூலை 12 ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் 5-வது ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஐந்து கூட்டங்களிலும் பல திட்டங்கள் ஏன் கால தாமதமாகிறது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதை அதிகாரிகளுக்கு வலியுறுத்துவதற்காக 1957-ஆம் ஆண்டு மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றினை காண்பித்தேன்.
அதாவது சாத்தனூர் அணை கட்டி முடிக்க திட்டமிட்ட காலத்தை விட ஓராண்டுக்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டதற்கும், திட்டமிட்ட செலவை விட அதிக லட்சங்கள் மிச்சப்படுத்தியதற்கும் பாராட்டி ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை அதிகாரிகளிடம் காண்பித்தேன்.
வட இந்திய அதிகாரிகள் ஆச்சரியத்துடன் நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட மாதிரியான நிர்வாகம் இருந்ததா என்று ஆச்சரியப்பட்டார்கள்.
நான் கூறினேன் அன்று தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது…இப்போது மாதிரியான வசதி வாய்ப்புகள் கிடையாது…ஆனாலும் திட்டமிட்ட காலத்தை விட ஓராண்டுக்கு முன்னதாகவே திட்டத்தினை முடிக்க முடியும் என்றால்?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடிக்க நீங்களெல்லாம் ஏன் இப்படி கால தாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு
உடனே அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவுபடுத்துகிறோம் என்று கூறினர்.
அந்தக் காலத்திலேயே இதுபோல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கும்போது நாம் ஏன் இன்று இது மாதிரியான அதிசயங்களை நிகழ்த்த முடியாது என்று கூறினர்…
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிற நேரத்தில் இது ஒரு சுவையான சம்பவம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ED அதிகாரிகள் எங்கும் நுழையலாம் : நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
சந்திராயன் 3: புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!