சென்னையில் ரூ.116 கோடியில் சிறுபாலங்கள், கால்வாய் : அமைச்சர் எ.வ.வேலு
தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறுமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ. வேலு, சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நெடுஞ்சாலை துறைக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்
துறையூர், திருப்பத்தூர், நாமக்கல் ஆகிய 3 நகரங்களுக்கு ரூ.286 கோடியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
தருமபுரி, செந்துறை ஆகிய 2 நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ. 36 கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, புதுக்கோட்டை – கறம்பக்குடி, இராமநாதபுரம் – அபிராமம், திருவண்ணாமலை மாவட்டம் -போளூர், அரியலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டாம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய 8 நகரங்களுக்கு புற வழிச்சாலை அமைக்க ரூ.1.50 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளில், சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ. 150 கோடியில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும்.
அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து” என்ற திட்டத்தின் கீழ் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.
நபார்டு வங்கி கடன் உதவியுடன் 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ. 487 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு செல்லும் சாலை 22.80 கோடி ரூபாயில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
இராமேஸ்வரம், திருச்செந்தூர் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல புறவழிச்சாலைகள் அமைக்க 88 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சென்னைக்கான அறிவிப்புகள்
சென்னை, பல்லாவரம் மேம்பாலம் மற்றும் சென்னை புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்க ரூ.1 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சென்னை மாநகரில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராஜீவ் காந்தி சாலை போன்று பல்லாவரம் – துரைப்பாக்கம் ஆரச்சாலையை அடுத்த தொழில்நுட்ப விரைவு சாலையாக மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சென்னை பெருநகர் பகுதியில் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு வடக்கிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்காத வண்ணம் சாதனை படைக்கப்பட்டது. தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள், கால்வாய் ஆகியவை 116 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கரூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் இடையே போக்குவரத்துக்கு ஏற்ப புதிய இணைப்பு உருவாக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பாப்பாகோயில் கருங்கண்ணி சாலையை இணைக்கும் வகையில் 26 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு.
பிரியா
ராமேசுவரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்: எ.வ.வேலு
ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு