தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சட்டப்பேரவையில் முழக்கங்கள் எழுப்பி திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று(ஜனவரி 9) தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைத் தொடங்கினார்.
அப்போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள்,வெளியேறு வெளியேறு ஆளுநரே வெளியேறு, எங்கள் தமிழ்நாடு என முழக்கங்கள் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கலை.ரா
பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் துவங்கி வைத்தார்!
முதல் முறை அமைச்சராக சட்டப்பேரவைக்கு வரவிருக்கும் உதயநிதி