தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்று மக்கள் மத்தியிலும் கோட்டை வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அடுத்த தலைமை செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் “தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ், தான் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்கிறார்கள் ஆளுந்தரப்பில்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி சிவதாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பிரியா