இந்திய பொருளாதார வளர்ச்சி ஜோக்கா?: கடுப்பான நிர்மலா

அரசியல்

நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமை கொண்டுள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கியது. இன்று (டிசம்பர் 12) மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி,

“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதை இந்திய அரசாங்கம் கவனிக்கவில்லையா? இதனை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

மேலும் 2013-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை மறைமுகமாக விமர்சித்து அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்ததை, மேற்கோள் காட்டி ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இன்று இந்திய ரூபாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. இவரை ஏன் தமிழக மக்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி ரேவந்த் ரெட்டி பேசும்போது, ” இந்திய ரூபாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வீடு திரும்ப செயல்திட்டம் உள்ளதா?” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமை கொண்டுள்ளனர்.

இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இந்திய பொருளாதாரம் வளர்வதில் சிக்கல் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

ஆனால் சிலர் அதனை ஜோக்காக எடுத்துக்கொள்கிறார்கள். மற்ற நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

செல்வம்

மெஸ்ஸியை வெல்ல குரோஷியா வீரர் சொன்ன ரகசியம்!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

+1
0
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *