டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமைச்செயலகமான ஏகேஜி பவனில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரியின் உடலிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் இன்று (செப்டம்பர் 14) மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட தொற்றால் காலமானார்.
பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக, அவரது உடல் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமைச்செயலகமான ஏகேஜி பவனில் இன்று காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலிற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், தமிழக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாகச் சென்று சீதாராம் யெச்சூரியின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, டெல்லி ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் யெச்சூரியின் உடல் மாணவர்கள் அஞ்சலிக்காக நேற்று (செப்டம்பர் 13) வைக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் யெச்சூரி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புதிய கல்விக் கொள்கை, சென்னை மெட்ரோ… பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின்
கல்லூரிக்குள் நுழையாதவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் … டைம் இதழின் சிறந்த நிறுவனம் அதானி குழுமம்!
மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு விசிக அழைப்பு… ஸ்டாலின் ரியாக்ஷன்!