டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு நிமோனியா போன்ற வியாதியின் அறிகுறிகள் தென்பட்டதால், ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU)-வில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூச்சுக்குழாயில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது மிக மோசமாக உள்ளதால், சிறப்பு மருத்துவ குழு ஒன்று அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….