சிங்கப்பூர் – தமிழ்நாடு : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அரசியல்

சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 24) 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார்.

இன்று (24.5.2023) சிங்கப்பூரில் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். 

“அழகிலும், அமைதியிலும் தலைசிறந்த நாடு, சிங்கப்பூர். எதிலும் ஒரு ஒழுங்கு, நேர்த்தி. சுத்தம். அதுதான் சிங்கப்பூர். நகர நிர்வாகத்தில் அதிகபட்ச தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி திறமையாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மற்ற உலக நாடுகளுக்கு, சிங்கப்பூர் ஒரு தர அளவுகோலாகத் திகழ்கிறது.

சிங்கப்பூரை நாங்கள் வெளிநாடாக நினைப்பது இல்லை. ஏனென்றால் எங்களது தாய்மொழியாம் தமிழ் மொழி, ஆட்சி மொழியாக இருக்கும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் தொன்று தொட்டே சிறப்பான உறவு உள்ளது. 

சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். எங்களது முன்னேற்றப் பயணத்தில் இணைந்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோர்த்திட வேண்டும். 

இப்போது தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார். 

6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பிரியா

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

குமரியில் ஏசி படகு: கட்டணம் எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “சிங்கப்பூர் – தமிழ்நாடு : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *