புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களே கஷ்டப்பட்டு வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளின் நிலை இன்னும் மோசமானது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கமான டிசம்பர் 3 இயக்கத்தின் நிர்வாகி தீபக் நாதன் எழுதிய ஒரு சமூக தளப் பதிவு பேசுபொருளாகியுள்ளது.
அவர் எழுதியது இதுதான்…
“திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.
சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது.
மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார் . ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன்.
உடனே எண்ணிக்கை விலாசம் கொடுங்கள் , மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து வழி அனுப்பினார்.
ஒன்றும் புரியவில்லை எல்லாம் பட படவென நடந்து விட்டது.
இன்று ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள், எங்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது.
புதிய உபகரணங்கள் கேட்டிருந்தோம். அனைத்தும் வரும் என்றார்.
அரசியல்வாதி தருகிறார் என்றால் , எங்களோடு புகைப்படம் எடுப்பார் , பேசியது வீடியோவாக வரும் என்று நினைத்தேன். இது எதுவும் அவர் செய்யவில்லை. கொடுத்ததைக் கூட அவர் எங்கும் எழுதவில்லலை.
மாற்றுத்திறனாளிகளுடன் இந்நேரத்தில் நிற்கவேண்டும் என்று நினைத்து , அதை உடனே நிறைவேற்றிய அன்புக்கு நன்றி தோழர் ‘ உதயநிதி ஸ்டாலின்’ வேறு என்ன வடிவில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. வலது கை கொடுத்தது , இடது கைக்கு தெரியாத முறை என்பார்கள் ! அப்படியே நிகழ்த்திவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் தீபக் நாதன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
சேதமடைந்த சான்றிதழ்: சிறப்பு முகாம் எப்போது?
மழை நீரில் எண்ணெய் கழிவு: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி!