சீக்கியர்கள் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 11) டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நேற்று (செப்டம்பர் 11) உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது சில மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை மற்றவர்களை விட தாழ்வாகக் கருதுகிறார்கள். இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் கடா அணிவதற்கும் குருத்வாராவுக்கு செல்வதுமே பெரிய பிரச்சனையாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் சீக்கிய பிரிவு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் இல்லத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பாஜக சீக்கிய பிரிவு தலைவர் ஆர்.பி.சிங் பேசும்போது,
“சீக்கியர்கள் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். வெளிநாட்டில் இருந்துகொண்டு சீக்கியர்களை ராகுல் இழிவுபடுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இமானுவேல் சேகரன் நினைவு தினம்… தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?