ரோஸ்கார் மேளா திட்டத்தில் 3 ஆவது கட்டமாக 71,000 பேருக்கு பணியாணை வழங்கிய பிரதமர் மோடி, இது அரசின் நல்லாட்சியின் அடையாளம் என்று பேசினார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ரோஸ்கார் மேளா என்ற பெயரில் இத்திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் , ரெயில்வே தோ்வு வாரியம், அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை இரண்டு கட்டங்களாக சுமாா் 1.47 லட்சம் பேருக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்.
டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவலர், சுருக்கெழுத்தாளர், இளநிலை கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர்,
வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூகப் பாதுகாப்பு அலுவலர், தனிச்செயலர் என பல்வேறு துறைகளில் நாடு தழுவிய அளவில் சென்னை, கோவை, திருச்சி உட்பட 45 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,வேலைவாய்ப்பு திருவிழாவானது அரசின் நல்லாட்சியின் அடையாளமாக திகழ்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதை இது காட்டுகிறது.
வரும் மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கும்.வேலைக்கு தேர்வானவர்கள் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்க போகிறீர்கள்.
எனவே, நீங்கள் அனைவரும் மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி
தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் – எங்கே தொடங்குகிறார் தெரியுமா?