பிரதமர் இல்லம் முற்றுகை: காங்கிரஸ் அறிவிப்பு!

அரசியல்

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இல்லம் முன்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இரு அவைகளும் முற்றிலும் செயல்படவில்லை.

இந்நிலையில் , வேலையின்மை ,விலைவாசி உயர்வு , ஜி.எஸ்.டி . வரி விகிதம் ஆகியவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.

பிரதமர் இல்லம் முன்பு நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இதேபோல் ஜனாதிபதி மாளிகை நோக்கியும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஊர்வலம் செல்ல இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.26 சதவீதத்தில் இருந்து 7.01 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-மு.வா.ஜெகதீஸ் குமார்
+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *