அடுத்த முதல்வர்… போஸ்டர்களால் கர்நாடக காங்கிரஸில் குழப்பம்!

அரசியல்

கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் முதல்வர் பதவி குறித்து போஸ்டர் ஓட்டியிருப்பதால் காங்கிரஸ் தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (மே 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

135 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது. இருந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி நிலவி வருகிறது.
அடுத்த முதல்வரை தீர்மானிப்பது தொடர்பாக இன்று (மே 14) மாலை கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்களாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர சிங் , தீபக் பபாரியா ஆகியோரை நியமித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

அதுபோன்று அடுத்த முதல்வர் யார் என்று முடிவு செய்வதற்காக மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லி செல்கிறார். இந்தசூழலில் முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் வீடுகளுக்கு முன் வைத்துள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள், “டி.கே.சிவக்குமார்தான் அடுத்த முதல்வர்” என்று போஸ்டர் வைத்துள்ளனர்.

அதுபோன்று சித்தராமையா ஆதரவாளர்கள், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற பேனர்களை அவரது வீட்டின் முன்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்திற்கு சித்தராமையா சென்றிருக்கிறார். இரு தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர் வைத்திருப்பதால், யாரை தேர்ந்தெடுப்பது என காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது.

பிரியா

கள்ளச்சாராயம் குடித்து பலி: 4 போலீஸார் சஸ்பெண்ட்!

கள்ளச் சாராயம்: முக்கிய குற்றவாளியை கைகாட்டிய அமரன்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *