வாஸ்து காரணமாக மூடப்பட்ட கதவு: சித்தராமையா அதிரடி!

அரசியல் இந்தியா

மூடநம்பிக்கை காரணமாக தலைமை செயலகத்தில் பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த கதவை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (ஜூன் 24) திறந்து வைத்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது காங்கிரஸ். இதையடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், அன்னபாக்யா யோஜனா திட்டம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்று தலைமைச்செயலகத்துக்கு வந்தார் முதல்வர் சித்தராமையா.

அப்போது தனது முதல்வர் அலுவலகத்தின் தெற்கு வாயில் கதவு மூடப்பட்டிருப்பதைக் கவனித்தார்.

இதுகுறித்து கேட்டபோது, வாஸ்து காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அக்கதவு திறக்கப்படாமல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் அருகே சென்ற சித்தராமையா, உடனடியாக கதவை திறக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி மேற்கு வாசலில் இருந்து உள்ளே நுழைந்த ஊழியர்கள் மூடப்பட்டிருந்த தெற்கு வாசல் கதவை திறந்துவிட்டனர்.

உடனடியாக அந்த வாயில் வழியாகவே நுழைந்து தனது அறைக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து அதிகாரிகளும் அந்த வழியில் உள்நுழைந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2013 ஆண்டு கர்நாடக முதல்வராக சித்தராமையா இருந்தபோது தான், இந்த தெற்கு கதவை திறந்து வைத்தார். அவரது பதவிகாலம் முடிவடைந்ததும், அடுத்த வந்த முதல்வர்கள் வாஸ்து காரணம் காட்டி அந்த கதவை மூடிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது சித்தராமையா ஆட்சிக்கு வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : பன்னீர் அறிவிப்பு!

பாஜகவுக்கு ஓட்டுபோட்ட திமுக: செந்தில் பாலாஜி இல்லாத கோவை நிலவரம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

1 thought on “வாஸ்து காரணமாக மூடப்பட்ட கதவு: சித்தராமையா அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *