சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி: தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

அரசியல்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று(நவம்பர் 17) வெளியிட்டார்.

தமிழக அரசின் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி என ஐந்து மருத்துவப் படிப்புகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259 ஆக உள்ளன.

26 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும்,  நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும்,  அரசு  ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது.

இதுவரை பெறப்பட்ட அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 2756. அதில் தகுதியான விண்ணப்பங்களாக 2573.  தரவரிசையில் பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 878 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 812 விண்ணப்பங்கள் தகுதிபெற்றுள்ளன.  

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் இட ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

கலை.ரா

மாற்றப்படும் பொறுப்பு தலைமை நீதிபதி!

பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *