சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் எனது நண்பர்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை பணியாற்றினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில் இன்று (மே 14) கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்த முறை காங்கிரஸுக்கு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். காங்கிரஸில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தலைவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். இந்த தேர்தலுக்காக தேசிய தலைவர்கள் முதல் அனைவரும் உழைத்தார்கள். இன்று முதல் காங்கிரஸுக்கு சவால் ஆரம்பித்திருக்கிறது.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின்போது நான் எஸ்.பி.யாக இருந்திருக்கிறேன். என் மீது அதிக அன்புடன் இருப்பார். அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. அவர் ஒரு சிறந்த தலைவர்.
காங்கிரஸுக்கு ஒன்று என்றால் டி.கே.சிவக்குமாரை கூப்பிடுவார்கள். இருவருமே நல்ல தலைவர்கள். எனவே நல்ல ஆட்சியை தர வேண்டும்” என்றார்.
அதுபோன்று தேர்தல் வாக்குறுதிப்படி மேகதாது அணையை கட்டக்கூடாது. அப்படி முயற்சி எடுத்தால் தமிழகத்தில் இருந்து என்னுடைய போராட்டம் முதல் போராட்டமாக இருக்கும் என குறிப்பிட்டார் அண்ணாமலை.
பிரியா
“கடினமான தேர்வு” : கர்நாடகாவின் அடுத்த முதல்வர் – எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!
சிபிஐக்கு புதிய இயக்குநர்: யார் இந்த பிரவீன் சூத்?
Comments are closed.