கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வரும் சூழலில் ராகுல் காந்தியை சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இன்று (மே 17) தனித்தனியாகச் சந்திக்க உள்ளனர்.
224 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆனால் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல்வர் யார் என்று அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
முதல்வர் பதவிக்கு சித்தாராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இருவரும் நேற்று (மே 16) தனித்தனியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தன்னை ஏன் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை இருவரும் கார்கேவிடம் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து இன்று மாலை பெங்களூருவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் முதல்வர் யார் என்று அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்க உள்ளனர். டெல்லியில் காலை 11.30 மணிக்கு சித்தராமையாவும், மதியம் 12 மணிக்கு டி.கே.சிவக்குமாரும் சந்திக்க உள்ளனர்.
இன்று மாலை அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ராகுல் காந்தியை இருவரும் சந்திக்கத் திட்டமிட்டிருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
சாராய வியாபாரிக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து!
குறைந்து வரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!