செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Should Senthil Balaji continue as a minister
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் கோரி சட்டப் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் 2024 செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஒருநாள் இடைவெளியில் (செப்டம்பர் 27), மீண்டும் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அமைச்சராக நியமிக்கப்பட்டு 29ஆம் தேதி பதவியேற்றார்.
இந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வித்யா குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “அமைச்சர் பதவியில் இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்ததும் ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகிவிட்டார். இதனால் அமைச்சரை எதிர்த்து சாட்சியம் சொல்ல சாட்சிகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு நியாயமானது தான். அமைச்சர் பதவியில் இல்லை என்பதால் ஜாமீன் கொடுத்தோம். ஜாமீன் பெற்ற உடனேயே அமைச்சராக பதவி ஏற்றது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 12) நீதிபதி, அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அவ்வளவு அவசரம் ஏன்? Should Senthil Balaji continue as a minister
அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கின் குற்றச்சாட்டு தீவிரமானது. அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்?
வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?
200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்?
அவர் அமைச்சராக தொடர விரும்பினால்… இந்த வழக்கை முன்னுரிமை (மெரிட்) கொடுத்து விசாரிக்கலாம். கடந்த முறையே நாங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தோம்” என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டனர்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் முன்பு வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை. இது அவரது பயத்தையே காட்டுகிறது என்பதால் செந்தில் பாலாஜியின் ஜாமீனை திரும்ப பெற வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவியுங்கள்” என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். Should Senthil Balaji continue as a minister