பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தை நோக்கி உண்மையான சுதந்திரம் என்ற பெயரில் அரசுக்கு எதிராக நீண்ட பேரணியை நடத்தி வருகிறார்.
இன்று(நவம்பர் 3) மாலை வசிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே சென்றபோது இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் இம்ரான் கானின் வலதுகாலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சம்பவம் நடந்த உடனேயே இம்ரான் கான் குண்டு துளைக்காத வாகனத்திற்கு மாற்றப்பட்டார்.
மேலும் பேரணியில் பங்கேற்ற 4 பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கலை.ரா