சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்கும் என அக்கட்சி இன்று (மார்ச் 13) அறிவித்துள்ளது. shiromani akali dal attend delimitation meeting
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் மார்ச் 22-ம் தேதி முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் உட்பட 29 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
இதனையடுத்து திமுக எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்ச் 22 இல் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் பங்கேற்கும் என முதல்வரின் செயலாளருக்கு அக்கட்சி சார்பில் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சிரோமணி அகாலி தள தலைவர் பல்விந்தர் சிங் பூந்தர் மற்றும் கட்சியின் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளார் தல்ஜித் சிங் சீமா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.