டெல்லி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றி..கெஜ்ரிவால் வாழ்த்து!

அரசியல்

டெல்லி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்று புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ரேஹா குப்தாவைவிட 34வாக்குகள் கூடுதலாக ஷெல்லி ஓபராய் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 260இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாக இருக்கிறது.

2வது இடத்தில் 109உறுப்பினர்களுடன் பாஜக 2-வது இடத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 9உறுப்பினர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களும் மேயர் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி குரல் கொடுத்ததால் 3முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றுகூறி தேர்தலை நடத்த கடந்த 17ஆம் தேதி உத்தரவிட்டது. இதன்படி இன்று தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜக சார்பில் குப்தா களத்தில் இருந்தனர். இதில் ஷெல்லிக்கு 150-வாக்குகளும், குப்தாவுக்கு 116வாக்குகளும் கிடைத்தன.

இந்நிலையில் டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ டெல்லி மக்கள் வென்றுள்ளார்கள், அராஜகம் தோல்வி அடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ அராஜகம் தோற்றுள்ளது, மக்கள் வென்றுள்ளனர்.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மீண்டும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாட்டி வதைக்க போகும் வெயில்: வானிலை மையம்!

100 கிமீ … வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் மக்னா யானை!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *