காங்கிரஸ் தலைவர் தேர்தல் : சசிதரூர் எம்.பி போட்டி!

அரசியல்

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை. தங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்று ராகுல்காந்தி ஏற்கெனவே தெரிவித்து விட்டார். இதனால் 24 வருடங்களுக்கு பிறகு அவரது குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று (செப்டம்பர் 24) தொடங்கி உள்ளது.

ஏற்கெனவே ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியுமான அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

அவரை எதிர்த்து ஜி23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான சசிதரூர் போட்டியிட உள்ளார்.

சசிதரூர் சார்பில் அவருடைய பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவங்களை கட்சியின் தேர்தல் ஆணைய தலைவரிடம் இருந்து வாங்கி சென்றனர்.

இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் விதித்த நிபந்தனை!

“வனங்களை, நீர்நிலைகளை மீட்டெடுக்கவேண்டும்”– முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *