தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் இன்று (மே 2) அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது.
இதற்கு அஜித் பவார் மற்றும் சரத் பவார் இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சரத் பவார் கூறும்போது,
“தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். ஆனால் பொதுவாழ்வில் இருந்து நான் ஓய்வு பெற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் பதவியிலிருந்து சரத் பவார் ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவிக்கு அஜித் பவார் அல்லது சரத் பவார் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசின் தேர்வுகள்: முதல்வர் ஸ்டாலின்
தூக்கு தண்டனை: நிபுணர் குழு அமைக்க முடிவு!