தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஜிபி பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள் கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்தது.
அதன்பின் தலைமை தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்தது வந்தது. இந்த பதவிக்கு தலைமை செயலாளர் இறையன்பு நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலை வந்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு புதிய தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோன்று முன்னாள் ஏடிஜிபிக்கள் தாமரை கண்ணன், பிரியா குமார், திருமலைமுத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரியா