பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை: பாஜக மா. செ பதவி நீக்கம்!

அரசியல்

பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்ட பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், காலை உணவு திட்ட சமையலராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போல் காலை உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும் பாஜக மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் தனது வண்டியில் ஏறுமாறு கூறியிருக்கிறார்.

சமையல் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

“சமையல் செய்யும் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறியதால் அவரது வண்டியில் ஏறியதாகவும், சமையல் கூடத்துக்குச் சென்ற பின்னர் அங்கு தனது விரலை பிடித்து வாயில் வைத்ததாகவும், கட்டிப்பிடித்ததாகவும்” பாதிக்கப்பட்ட  பெண் சமையலர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மகுடீஸ்வரன் மீது, மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பதவியில் இருந்து மகுடீஸ்வரனை நீக்குவதாக மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவரை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரைப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு… இடைத்தேர்தல் எப்போது?

விவாகரத்து கேட்டு தனுஷ் -ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

 

+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *