சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
இந்த தனித்தீர்மானத்தில், “தமிழகம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்பெற செய்வதற்கு இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்கி வருகிறது.
இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே இருக்கும்.
இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. அதனால் தாமதமின்றி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு முன் வர வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்.” என்று முதல்வர் தனித்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று முன்மொழியப்பட்டு அதன் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேச உள்ளனர். மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
சேது சமுத்திர திட்டம் என்பது பாக் நீரிணைப்பு மற்றும் ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும் போது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து இலங்கையை சுற்றாமல் சேதுக்கால்வாய் வழியாக வங்க கடலை அடைய முடியும்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா : கல்கண்டு பொங்கல்
ஆளுநர் விவகாரம்: குடியரசுத் தலைவருடன் டி ஆர் பாலு சந்திப்பு!
சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள்!