டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

கேரளாவில் முழு அடைப்பு!

இந்தியா முழுவதும் நேற்று (செப்டம்பர் 22) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய நிலையில், அதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (செப்டம்பர் 23) கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது.

ஆஸ்திரேலியா – இந்தியா மோதல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதும், இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

பாஜக ஆலோசனை கூட்டம்!

நேற்று தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சிவகங்கையில் இன்று பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  

சதுரகிரி சாமி தரிசன அனுமதி!

புரட்டாசி பிரதோஷம் மற்றும் ‌‌‌மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

நித்தம் ஒரு வானம் டிரைலர் வெளியீடு!

கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டிரைலரை இயக்குனர் அட்லீ இன்று காலை 9.33 மணியளவில் வெளியிடுகிறார்‌.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 125-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான்!

நேற்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.

மின் கட்டண வழக்கு!

மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கேவியட் மனு, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பின் மேல்முறையீட்டு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

 பபூன் திரைப்படம் இன்று வெளியாகிறது!

வைபவ் நடித்த பபூன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அசோக் வீரப்பன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி!

அமேசான், பிளிப்கார்ட் இ-காமர்ஸ் வலைதளங்களில் பண்டிகை கால தள்ளுபடி ஆஃபர்கள் விலையில் பொருட்கள் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்: ஆய்வில் தமிழிசை

‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *