டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

கலை பண்பாட்டுத் துறை முப்பெரும் விழா!

கலை பண்பாட்டுத் துறையின் முப்பெரும் விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் திறந்தவெளி அரங்கில் இன்று (செப்டம்பர் 22) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று (செப்டம்பர் 22) வெளியிடுகிறது.

கட்டணம் செலுத்த கடைசி நாள்!

இளநிலை பொறியியல் படிப்பில் முதல் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள் கட்டணம் செலுத்த இன்று (செப்டம்பர் 22) கடைசி நாள்.

வானிலை நிலவரம்!

தமிழகம் நோக்கி வீசும் மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 22) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்திய அணி வெற்றி!

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

ராகுலுக்கு எதிரான வழக்கு!

ஒற்றுமை நடைபயணத்தை முறையாக ஒழுங்குபடுத்த காவல்துறைக்கும், கேரள அரசுக்கும் உத்தரவிடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வருகிறது.

துணிவு செகண்ட் லுக்!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் செகண்ட் லுக் இன்று (செப்டம்பர் 22) 12.30 மணியளவில் வெளியாக உள்ளது.

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல்!

திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று (செப்டம்பர் 22) முதல் தொடங்குகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 124வது நாளாக (செப்டம்பர் 22) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெண்டர் முறைகேடு வழக்கு!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி , தாக்கல் செய்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வருகிறது.

ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு: ஆ.ராசா என்ன சொல்கிறார்?

சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.