டாப் 10 செய்திகள்..! இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

இந்தியா வந்தடைந்த பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இன்று (செப்டம்பர் 17) அதிகாலை 2 மணியளவில் பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 17) 10-வது நாள் நடைப்பயணத்தைக் கேரள மாநிலம் புதிய காவு சந்திப்பு பகுதியில் தொடங்கி, ஹரிபட் பகுதியில் நிறைவு செய்கிறார்.

பெரியார் பிறந்த நாள்!

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 17), தமிழக அரசு சார்பில் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ராமராஜன் நடிக்கும் புதிய படம்!

நடிகர் ராமராஜன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று (செப்டம்பர் 17) மாலை 6 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது

இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிப்பு!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக, இந்திய ஏ அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  சஞ்சு சாம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி பரிசு பொருட்கள் ஏலம்!

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் மின்னணு முறையில் இன்று (செப்டம்பர் 17) ஏலத்தில் விடப்படுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 463 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 4,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் மோடி பிறந்தநாள்!

பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடுகிறார். அவருக்கு உலக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

மேற்குத் திசைக் காற்றின் மேக வேறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 17) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 17) 119-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு நல்ல செய்தி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.