தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கென தனி கொள்கை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சர்வதேச விளையாட்டு அறிவியல் குறித்த இரு நாள் கருத்தரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, தமிழ்நாடு விளையாட்டுத் துறை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, விளையாட்டு அறிவியல் துறை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“கடந்த நூற்றாண்டில் அறிவியலின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அறிவியலும் தொழில்நுட்ப கருவிகளும் அத்தியாவசியமானது.
ஒலிம்பியாட், ஹாக்கி எனப் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கென தனி கொள்கை கொண்டு வரப்பட உள்ளது. வெறும் ஆலோசனை மட்டும் நடத்தும் கூட்டமாக இந்த கருத்தரங்கு இருக்காது.
விளையாட்டு போட்டிகளை நடத்தும் மாநிலமாக மட்டும் அல்லாமல் சர்வதேச அரங்கில் வெற்றி பெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்” என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் கருத்தரங்கில் மருத்துவர்கள், விளையாட்டுத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கலந்துகொண்டு விளையாட்டுத் துறையில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இது மாதிரி கருத்தரங்கு நடத்தப்படுவது முதல் முறை. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த மாநாட்டில் பெறப்படும் கருத்துகளை வைத்து தமிழ்நாடு விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
நிரம்பும் வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஆன்லைனில் அழகு சாதனங்கள்… அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஹெல்த் டிப்ஸ்: மழைக் கால சளி பிரச்னையில் இருந்து தப்பிப்பது எப்படி?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!